தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதுக்கோட்டைமாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும்,நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.நீச்சல்குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின்கீழ் (Learn of Swim Course) 2025-ஆம்ஆண்டுக்கு கீழ்க்கண்டுள்ளபடி பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சி முகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும்.
ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு மையம் (Centre of Excellece-COE) மாணவ, மாணவியர் சேர்க்கை. கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப அறிவியல்பூர்வமான விளையாட்டு பயிற்சி தங்கும் இட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடியசிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஆறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை கோட்டம், அறந்தாங்கி வட்டத்தில், அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில், 09.04.2025 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 26.03.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தில் தொடர்ந்து பயன்பெறுவதற்கு விவசாயிகள் கிராம அளவில் நடைபெற்று வரும் நிலஉடைமைகளை சரிபார்த்துக் கொள்ளும் முகாமில் கலந்துகொண்டு பதிவு செய்திடலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் அத்யாவசிய பொருட்கள் பெரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளும் தங்கள் கைவிரல் ரேகை பதிவினை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் பதிவு செய்திட சென்னை, உணவுப்பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், தங்கள் கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு தங்கள் நில விவரங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களுக்கு அருகாமையில் உள்ள பொது சேவை மையங்களிலும் கட்டணமின்றி பதிவு செய்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதித்ராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடின மாணவ/ மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டியூட்டியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.