புதுகைப் பண்பலை

தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் 1997 ஆம் வருடம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் துவக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் கிராமங்களை மேம்பாடு அடைய செய்தல் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பயிற்சிகள், கருத்தரங்குகள், விழாக்கள் போன்றவை மூலம் சுற்றுச்சூழல், சுகாதாரம், சுயதொழில் வேலைவாய்ப்பு, அறிவியல், வேளாண்மை போன்ற துறைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தகவல்களை பயிற்சிகளை வழங்கியுள்ளது, வழங்கியும் வருகிறது.

அறக்கட்டளை சட்டத்தின் படி முறையாக அரசிடம் பதிவு பெற்றுள்ள இந்நிறுவனம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாட்டிற்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது(2011) பெற்றுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் தாவர அறிவியல் துறையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந் நிறுவனத்தின் ஒரு பகுதியாக தகவல்களை விரைந்து பொதுமக்களுக்கு வழங்கும் வகையிலும் வானொலி மூலம் பயிற்சிகள் பல அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டு இறுதியாக அரசின் முழு அனுமதி பெற்று புதுகை எப்எம் 91.2 என்ற அலைவரிசையில் சமுதாய வானொலி புதுக்கோட்டை கூடல் நகரில் 23.02.2021 ஆண்டு துவங்கப்பட்டது புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வமான அரசு அனுமதி பெற்ற ரேடியோ புதுகை எப்எம் 91.2 என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த வானொலி நிலையத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பி.உமா மகேஸ்வரி அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொலைதூரக் கிராமப் பகுதிகளை தேடிச்சென்று சாமானிய மக்களையும் இணைத்து சமூகத்திற்கு தேவையான பல பயனுள்ள தகவல்களை வழங்கும் முக்கிய ஊடகமாக புதுகை எப்.எம் 91.2 சமுதாய வானொலி செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

கிராமப்புற மக்களை நாட்டின் மேம்பாட்டிற்காக அதிகாரம் பெற்றவர்களாக, ஆளுமை மிக்கவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக, மற்றும் பொறுப்புள்ள குடிமகனாக மாற்ற தேவையான தகவல்களை பரிமாறுவதும் பயிற்சி அளிப்பதும், அரசு நலத்திட்டங்கள் உட்பட கல்வி, அறிவியல் விவசாயம், விளையாட்டு, மருத்துவம், பாரம்பரிய அறிவு, இலக்கியம், கலை, பண்பாடு, கால்நடை பராமரிப்பு, சுற்றுச்சூழல், கலாச்சாரம், தொழில் வாய்ப்புகள் என பல்துறை சார்ந்த சிறப்பு வாய்ந்த தகவல்களை வழங்க செய்வதும் புதுகை எப்எம் 91.2 சமுதாய வானொலி முக்கிய நோக்கமாகும்.

புதுகை எஃப் எம் 91.2 வானொலி மாவட்ட நிர்வாகம் கிராம பஞ்சாயத்து வேளாண் அலுவலர் அலுவலகம் தன்னார்வ நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மகளிர் அமைப்பு உழவர் மன்றங்கள் போன்றவற்றுடன் இணைந்து சமூகத்திற்கு தெளிவான அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான தகவலை வழங்குகிறது.

திட்ட பயனாளர்கள்

விவசாயிகள், பெண்கள், வளரிளம் பருவத்தினர், மாணவர்கள், இளைஞர்கள், பள்ளி குழந்தைகள், தொழில்முனைவோர், ஓய்வு பெற்ற நபர்கள் மற்றும் இதர  கிராம, நகர மக்கள்.

திட்டப்பணி இடம் : புதுக்கோட்டை மாவட்டம்

அனுமதி

புதுகை எஃப் எம் 91.2 சமுதாய வானொலி இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் முறையான அனுமதி பெற்றுள்ளது. அனுமதி எண். NWW34320201020307 நாள் 16.09.2022

பாராட்டு சான்றிதழ்

appreciation